இன்றைய சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில், "தூவி" நூலின் வாசிப்பனுபவம் வெளியாகியுள்ளது. இதை எழுதிய திரு. ராஜ் குமார் அவர்களுக்கு மிக்க நன்றி.
தூவி ஒரு கவிதை நூல் என்பதால் வாசிப்பவர்கள் மிகக் குறைவே. ஒவ்வொரு பறவையினத்திற்கும் ஒவ்வொரு கவிதை என்று வகைப்படுத்தி தமிழில் கவிதை நூல் எதுவும் வெளியாகவில்லை. தூவி மூலமாக காக்கைக்கூடு பதிப்பகம் அதை செய்து காட்டியது.
இருப்பினும், பறவையினங்களின் வாழிடச் சூழலை, அதன் சிக்கல்களை தொடர்ந்து எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். என்றாவது ஒரு நாள், யாரேனும் ஒருவருக்கு அது மாற்றங்களை உருவாக்கும் என உறுதியாக நம்புகிறேன். அதன் சான்றாகவே, இன்றைய சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் வெளியான பதிவு உற்சாகம் அளிக்கிறது.
"தூவி" நூலில் அறுபத்து இரண்டு பறவையினங்கள் பற்றி கவிதைகள் எழுதியிருந்தேன். அது போலவே "பறவைகளின் உயிர்ச்சூழல்" நூலிலும், "தூவி" நூலில் இடம்பெறாத வேறு அறுபத்து இரண்டு பறவையினங்கள் பற்றி கவிதைகள் எழுதியிருக்கிறேன். எனவே "தூவி" நூலை வாசித்தவர்களுக்கும், வாசிக்காதவர்களுக்கும் "பறவைகளின் உயிர்ச்சூழல்" நல்ல அனுபவத்தை தரும் என நம்புகிறேன்.
0 Comments