திட்டமிட்டபடி "கொடைக்கானல் குல்லா" நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக கொடைக்கானலில் 17.12.2024 அன்று நடைபெற்றது. சோலைக்குருவி அமைப்பின் ஐந்தாவது ஆண்டு விழாவில் என்னுடைய நூல் வெளியானது மிக்க மகிழ்ச்சி.
மிகச் சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் அரங்கத்திற்கு சென்ற போதே கயலின் படத்தை வரைந்து ஆச்சர்யப்படுத்தி விட்டார் முனைவர். திவ்ய பாரதி அவர்கள்.
முனைவர். ராஜமாணிக்கம் வெளியிட, முனைவர். திவ்ய பாரதி அவர்கள், தாவரவியல் அறிஞர் திருமிகு. பிப்பா முகர்ஜி அவர்கள், திரு. ரவீந்திரன் நடராஜன் அவர்கள், திரு. ராம்ஜி அவர்கள், சோலைக்குருவியின் திரு. பிரிங்ளி அவர்கள் ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டனர்.
வழக்கம் போல முனைவர். ராஜமாணிக்கம் அவர்களும், முனைவர். திவ்ய பாரதி அவர்களும் சிறப்பான உரை நிகழ்த்தினார்கள். திரு. ரவீந்திரன் நடராஜன் அவர்கள் நூல் பற்றிய சிறப்பான உரை நிகழ்த்தினார்.
திரு. ரவீந்திரன் நடராஜன் அவர்கள் எனக்கு அவர் எடுத்த வேங்கைப்புலியின் ஒளிப்படத்தை பரிசளித்தார்.
சூழலியல் எவ்வளவு மோசமான விளைவுகளை சந்திக்கிறது என்பது பற்றி திருமிகு. பிப்பா முகர்ஜி அவர்களும், திரு. ராம்ஜி அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.
சுட்டி யானை பதிப்பாளர் திரு. அசோக் அவர்கள், இயற்கையின் தொடர்புகளை அழகாக எடுத்துப் பேசினார்.
நிகழ்ச்சியை நண்பர் திரு. யோஸ்வா சிறப்பாக வழி நடத்தினார்.
கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஊர்வனம் அமைப்பை சேர்ந்த திரு.விஷ்வா அவர்கள், கலந்து கொண்டது எனக்கு மிக்க மிகிழ்ச்சி. இந்த நூல் வெளியீடு நடந்ததே அவரால் தான் என்பது தான் ஆச்சர்யம். அவர் சரியான நேரத்திற்கு புத்தகங்களோடு வந்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உதவியாக இருந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி . .!!
சோலைக்குருவி நண்பர்கள் கொடுத்த ஆதரவையும், உற்சாகத்தையும் என்றும் மறக்க இயலாது. சோலைக்குருவியின் அத்தனை நண்பர்களுக்கும், என் மனமார்ந்த நன்றி..!!
பல ஊர்களில் இருந்தும் இந்த நிகழ்க்காக பயணித்து வந்த நண்பர்கள், வாசகர்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி..!!
0 Comments