இந்த ஆண்டு எழுதுவதற்கு அதிகம் நேரம் ஒதுக்கியதால், வாசித்தவை குறைவாக இருந்தன. இருப்பினும் சில நூல்கள் சூழலியலை புரிந்து கொள்ளும் புதிய பரிணாமத்தை கொடுத்தது. பிழைத்தல் அல்ல. வாழ்தல் மற்றும் இயற்கை 24 X 7 ஆகியவை முக்கியமான நூல்கள். The Vanishing வாசித்து முடிக்கும்போது ஒட்டு மொத்த இந்தியாவையும் சுற்றி வந்தது போல இருந்தது.
- வலசை போகும் விமானங்கள் - திருமதி.சாய் வைஷ்ணவி
- பிழைத்தல் அல்ல. வாழ்தல் (10 நூல்கள்) - திரு.ஜியோ டாமின்
- காலநிலை மாநாடு - திரு.கோவை சதாசிவம்
- இப்படிக்கு மரம் - திரு.கோவை சதாசிவம்
- இயற்கை 24 X 7 - திரு.நக்கீரன்
- பால் அரசியல் - திரு.நக்கீரன்
- பசுமைப்பள்ளி - திரு.நக்கீரன்
- வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி - திரு.நக்கீரன்
- Matriarch - Mr H Byju
- ஆந்தை ஓர் அறிமுகம் - திரு.பூ.இரத்தினசபாபதி
- வனநாயகன் - திரு.ஆரூர் பாஸ்கர்
- காந்தியின் நிழலில் - திரு.எஸ்.ராமகிருஷ்ணன்
- ஆனைமலை - திரு.பிரசாந்த் வே
- The Vanishing - Prerna Singh Bindra
- ஐ பாம்பு - திரு.விஸ்வா நாகலட்சுமி
- ஞாபகப் பெருங்களிறு - திருமதி. மோகனப்பிரியா
இந்த ஆண்டில் என்னுடடைய இரண்டு நூல்கள் வெளியாகின.
பறவைகளின் உயிர்ச்சூழல் (காக்கைக்கூடு பதிப்பகம்)
கொடைக்கானல் குல்லா (சுட்டி யானை பதிப்பகம்)
நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். நிறைய புதிய நண்பர்கள் கிடைத்தார்கள்.
அடுத்த ஆண்டில் இன்னும் கூடுதலாக எழுதவும் வாசிக்கவும் வேண்டும். புதிய ஆண்டில் என்னுடைய அடுத்த புத்தகங்கள் நிச்சயமாக வரும். தொடர்ந்து வாசிக்கும் அத்தனை பேருக்கும், என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
0 Comments