பசுமைப் பள்ளி - திரு. நக்கீரன்

திரு.நக்கீரன் அவர்கள் எழுதிய "பசுமைப் பள்ளி" வாசித்தேன். மிகவும் அருமையான நூல். பள்ளிக் குழந்தைகள் அனைவரும் வாசிக்க வேண்டிய அற்புதமான நூல். ஓரறிவு,  ஈரறிவு என நாம் வகைப்படுத்தி வைத்திருக்கும் உயிரினங்கள் ஒவ்வொன்றாக குழந்தைகளிடம் பேசி சூழலில் அவற்றின் பங்கை விளக்கும் விதம் மிக அருமை. 

ஐந்திணையை சேர்ந்த பூக்களும், ஒவ்வொரு திணையிலும் நிகழும் மாற்றங்களை குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் மிக எளிமையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

சூழல் மாசுபாடுகளை பற்றி ஐம்பூதங்கள் பேசுவதும் சிறப்பு. 

ஒவ்வொரு பள்ளிக்கு குழந்தையும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். 

சென்னை புத்தகக் கண்காட்சியில் காக்கைக்கூடு (580, 581) அரங்கில் கிடைக்கும். 


Post a Comment

0 Comments