கொடைக்கானல் குல்லா - வாசிப்பனுபவம் 1 - திரு. சதாம்

கொடைக்கானல் குல்லா நூலின் வாசிப்பனுபவத்தை நண்பர் சதாம் அனுப்பியிருந்தார். அவருக்கு என் நன்றி.


கொடைக்கானல் குல்லா புத்தகம் திரு. பா.சதீஸ் முத்து கோபால் அவர்களிடம் பெற்றுக்கொண்டதில் மிக்க மிக்க மகிழ்ச்சி.. எப்போது பணி முடியும் வீட்டுக்கு சென்றவுடன் வாசிக்க வேண்டுமே என்ற ஆர்வத்திலேயே இன்று முழுவதும் இருந்தேன்..



கொடைக்கானல் பற்றிய கதை ஆச்சே...

வாசித்தேன்... வாசிக்க... வாசிக்க.. எனது சிறுவயதில் சென்ற கொடைக்கானல் பயணத்திற்கே சென்றுவிட்டேன்..

ஆம்.. சிறுவயதில் திருநகரில் வசித்தோம்... அன்றைக்கு அவ்வளவு வீடுகள் இல்லை.. என் வீட்டு வாசலில் இருந்து பார்த்தால் கொடைக்கானல் மலைகள் அழகாக தெரியும்.. காலை மாலை இரவு என மலைகளை ரசிக்காத நாள் இல்லை.. வெயிலில் மின்னும் மலை சிகரங்களும்.. மழையில் வெள்ளிக்கோடுகளாய் ஆங்காங்கே அருவிகள் விழுவதையும்.. இரவு நேரத்தில் வாகனவிளக்குகளும் மேலே மின்னும் விளக்குகளையும் ரசிப்பதே அன்றைய நான் கொடைக்கானல் பற்றி அன்றைக்கே பல கற்பனைகளில் இருந்தேன்.. எப்போது போகப்போகிறோம் என்ற ஏக்கமும் பல வித கற்பனைகளும் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.. எட்டாவது படிக்கும் பொழுதுதான் முதன்முதலாக அப்பாவுடன் TVS XL ல் கொடைக்கானல் சென்றேன்.. கயல் மனதில் உள்ள கற்பனை என் மனதிலும் அன்று... நன்றி 

🩷🩷🩷🩷🩷🩷

Post a Comment

0 Comments