மிக்க நன்றி அண்ணா.
************
தம்பி சதீஸ் முத்து கோபால் சூழலியல் விழிப்புணர்வு குறித்த நூல்களைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர் .
அவருடைய புதிய சிறார் நூல் இந்த
' கொடைக்கானல் குல்லா '.
ஈரோட்டிலிருந்து ஒரு குடும்பம் காரில் கொடைக்கானல் சுற்றுலா சென்று திரும்பும் கதை இது. குடும்பம் என்றால் மூன்று பேர். அப்பா அம்மா அவர்களுடைய மூன்றாம் வகுப்புப்பயிலும் மகள் கயல்.
காரில் செல்வதால் ஒவ்வொரு இடமாக நிறுத்தி தன் மகளுக்கு அவளுடைய அப்பாவால் முக்கிய இடங்களைக் காண்பிக்கவும் அவ்விடங்களைக் குறித்து விவரிக்கவும் இயல்கிறது .
வழியில் குறுக்கிடும் ஆறுகள் நதிகள் அருவிகள் பறவைகள் விலங்குகள் பற்றி அப்பாவும் அம்மாவும் சொல்லச் சொல்ல மகள் கேட்டுத் தெளிவாகிக் கொள்கிறாள். அவ்வப் போது அவளும் குறும்புத்தனமாகச் சில கேள்விகள் கேட்கிறாள்.
நேர்கோட்டில் நெருடல் இல்லாது செல்லும் கதை கூறல் முறை. சரியான இடங்களில் வண்ண ஓவியங்கள். வாசிப்பவர் கொடைக்கானல் சென்ற திரும்பிய திருப்தியைத் தந்து விடுகிறது.
நூலாசிரியர் அவ்வப்போது தனது சூழலியல் விழிப்புணர்வு சார்ந்த கருத்துகளைச் சொல்வது பிரச்சாரம் போல தோன்றினாலும் இது போன்ற நூல்களில் அது தேவை என்றே படுகிறது.
சிறுவர்களுக்கான குறுநாவல் மற்றும் அவர்களுக்கான பயண நூல் போல இது உருவாகியிருக்கிறது.
தம்பி சதீஷ்க்கு என் வாழ்த்துகள்.
கொடைக்கானல் குல்லா
சிறார் கதை
பா. சதீஸ் முத்துகோபால்
ஓவியங்கள்: ஜீவா
வெளியீடு:
குட்டி யானை
ஊத்துக்குளி
போன்: 95001 25125
ரூ 150 பக் 53
0 Comments