கொடைக்கானல் குல்லா - வாசிப்பனுபவம் 5 - திரு. யோசுவா

நண்பர் திரு.யோஸ்வா அவர்களின் அற்புதமான வாசிப்பனுபவம். நன்றி சார்.

**********



கொடைக்கானல் குல்லா : நாங்கள் தினமும் மறந்து வைத்து வருவதும், அம்மா மறக்காமல் எடுத்துட்டு போ என்பதும் , மலைமேல் வாழும் மக்களுக்கு இயல்பான வார்த்தை. இங்கு வாழ்பவர்களுக்கு குல்லா என்பது பனிக்காலத்தின் நம்பிக்கை தரும் வார்த்தை. இந்த புத்தகம் அதுபோன்று வளரும் குழந்தைகளுக்கு நம்பிக்கை தருகிறது. இதில் வரும் கயல் சாலையில் அல்ல பழனி மலைத்தொடரில் பயணிக்கிறாள் என்பதை தெளிவாக சொல்கிறது.

ஏன் வன உயிர்களுக்கு உணவளிக்க கூடாது ? குறிஞ்சி செடி எப்படி அழிந்து வருகிறது ? ஓரின வாழ்வி என்று எல்லாவற்றையும் காரணத்தோடு விளக்குகிறது. சோலைக்குருவியின் தூய்மைப்பணியை கயலின் குடும்பத்தோடு மரத்தில் குரங்குகளும் , மலை அணிலும் கேட்பது போன்ற ஓவியம் அழகு. 

ஒரு வேளை இந்த அயல் மரங்களுக்கு பதிலா சோலை மரங்களும், புல்வெளிகளும் வந்தா வரையாடு திரும்பி வருமா என்று கயல் கேட்கும் இடம் நமக்கும் பெரிய எதிர்பார்பை உருவாக்குகிறது. குல்லாவை மறந்த கயல் மறக்காமல் எடுத்து சென்றாள் மரயானையை. 

கயல் மீண்டும் வருவாள் குறிஞ்சி பூ பார்க்க அல்ல , குறிஞ்சி நிலத்தை மீட்டுருவாக்கம் செய்ய .  அருமையான படைப்பு சார். கொடைக்கானல் குல்லா அனைவரையும் சென்றடைய வாழ்த்துக்கள் . நன்றி சார்.

Post a Comment

0 Comments