கொடைக்கானல் குல்லா பற்றிய வாசிப்பனுபவங்கள் தொடர்ந்து வருகின்றன. திருமிகு சண்முக வடிவு அவர்களுக்கு நன்றி.
*****************
ஈரோட்டில் இருந்து கயல் தனது அம்மா அப்பாவுடன் காரில் கொடைக்கானல் சென்று திரும்பும் பயணம் பற்றியதே இப்புத்தகம்.
கார் புறப்படும்போதே நமக்கும் பயண உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.
நாமும் கயலுடன் காரில் உடன் பயணிப்பது போன்றே உணரவைக்கிறது.
வெறுமனே சுற்றுப்பயணமாக இல்லாமல் சூழலியல் சார்ந்து பல்வேறு தகவல்கள், சோலைக்காடுகள், விலங்குகள்
பறவைகள்
செடிகள்/கொடிகள்,
சோலைக் குருவி தன்னார்வ அமைப்பு என நீளும் பயணம் ,
நமக்கும் இயற்கைக்குக்குமான
தொடர்பையும்,
இயற்கையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் அழகாகச் சொல்லிச் செல்கிறது.
கடைசியில் கயலுக்கு கிடைக்கும் தோழி மூணாப்பு படிக்கும் கண்மணி, நமக்கும் தோழியாகிப் போகிறாள்.
வாங்கி வாசியுங்கள்.. பரிசளியுங்கள்.
புத்தகம்: கொடைக்கானல் குல்லா.
எழுத்தாளர்:
பா.சதீஸ் முத்து கோபால்.
வெளியீடு:இயல்வாகை
சுட்டி யானை சிறார் வெளி.
5+வயதினருக்கு.
விலை ரூ.150/.
(தபால் செலவு தனி).
9500125125.
-சண்முக வடிவு
தூத்துக்குடி
0 Comments