விரல்களில் ஒட்டியிருக்கும்
விடுபட்டுப்போன வண்ணத்துப்பூச்சியின்
நிறத்துகள்களை,
தாழ்ந்த மரக்கிளையில்
தடவுகிற சிறுவனின் தலையில்
பூக்களை உதிர்க்கிறது மரம்.
தட்டிவிடுகிற அவன் விரல்களில்
மகரந்தத்துகள்கள்.!
விரல்களில் ஒட்டியிருக்கும்
விடுபட்டுப்போன வண்ணத்துப்பூச்சியின்
நிறத்துகள்களை,
தாழ்ந்த மரக்கிளையில்
தடவுகிற சிறுவனின் தலையில்
பூக்களை உதிர்க்கிறது மரம்.
தட்டிவிடுகிற அவன் விரல்களில்
மகரந்தத்துகள்கள்.!
0 Comments