வேட்டையன் பேசும் அறம்

பொது புத்தியில் எதுவெல்லாம் சரியென நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதற்கு இன்னும் வலு சேர்ப்பது போன்று கதையை நகர்த்தி, அதை ரஜினியை வைத்தே கட்டமைத்து ஆரவாரமாக நகர்கிறது படம். நீ செய்தது தவறு என அமிதாப் சொல்வதும், அதை ரஜினி மறுப்பதும் அதற்குப் பிறகான சுய பரிசோதைகளும்,  ரஜினி தன் தவறை உணர்வதும்  கவனமாக கையாளப்பட்ட காட்சிகள். 


தான் உருவாக்கிய பிம்பத்தை ரஜினி தானே உடைத்து நொறுக்குவதும், பார்த்துக்கொண்டிருப்பவர்களை உடன் பயணிக்கவைத்ததும் படத்தின் வெற்றிக்கு காரணமாகிவிட்டது. இயக்குனர் ஞானவேலின் சமூக அக்கறையும், இந்த கதையில் தன்னை பொறுத்திக்கொண்ட ரஜினியும் பாராட்டுக்குரியவர்கள். 

இந்த வயதிலும் இவ்வளவு ஆற்றலோடு செய்லபடும் மனிதராக ரஜினி இருப்பது பிரமிக்க வைக்கிறது. 

படம் எங்கெல்லாம் அறம்  பேசுகிறதோ அங்கெல்லாம் பின்னணியில் காந்தி இருக்கிறார். அறம் பேசும் அமிதாப்பும், ரஜினியிடம் வெளிப்படும் குற்ற உணர்ச்சியும் படத்தோடு ஒன்ற வைக்கிறது. 

வேட்டைக்காரன், வேட்டை என்றெல்லாம் தமிழ் படங்களின் தலைப்புகள் வைக்கும் போது வருத்தமாக இருக்கும். இன்னமும் வேட்டையை கொண்டாடுவது போன்ற தலைப்புகள் அவசியமா எனத் தோன்றும். வேட்டையன் என்ற தலைப்பும் அப்படித்தான் இருந்தது. வேட்டையனிடம் வெளிப்படும் குற்ற உணர்ச்சியும், நடந்த தவறுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அறம் பேசுகிற காட்சிகளும் அந்த நெருடலை போக்கியிருக்கிறது. 

Post a Comment

0 Comments