காடென்றா சொன்னேன்?
காடு மட்டுமல்ல.
கொஞ்சம் வீடுகளும்.
மன்னிக்கவும்.
சாலைகளும்,
வந்து போகிறவர்கள் தங்க,
சொகுசு விடுதிகளும்.
ஓ.. அதுவா!
அது காடல்ல.
தேயிலைத் தோட்டங்கள்.
இரவில் மின்னும் அது ஒரு நகரம்.
குளிக்க அருவி,
கேளிக்கைக்கு பூங்கா.
மதுவுக்கு எவ்விடமும்.
காடென்றா சொன்னேன்?
- பா.சதீஸ் முத்து கோபால்
0 Comments