நண்பர் பரணி அவர்களின் வாசிப்பனுபவம். தோழருக்கு மனமார்ந்த நன்றி.
----------------------------
சமீபத்தில் படித்த புத்தகம். அருமை நண்பர், இயற்கை ஆர்வலர் சதீஷ் அவர்களின் எழுத்தில் இன்றைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்மந்தமாக அவசியமான ஓர் புத்தகம்...
திரு தியோடர் பாஸ்கரன் மற்றும் திரு கோவை சதாசிவம் போன்ற சூழலியல் எழுத்தாளர்களால் முகவுரையும், அணிந்துரையும் எழுதப்பட்டுள்ளது என்றால் இந்த புத்தகம் எவ்வளவு முக்கியமான விஷயத்தை சொல்கிறது என்று புரியும்...
மனிதனால் இந்த பூமி எவ்வளவு வன்புணர்வு செய்யப்படுகிறது என்பதை நாம் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்...
புத்தகத்தின் ஆரம்பமே இந்த சில நூற்றாண்டுகளில் நம்மால் எத்தனை உயிரினங்கள் வாழிடம் இல்லாமல் அழிந்து போய் வெறும் பதப்படுத்தப்பட்ட காட்சி பொருளாக உலகெங்கும் உள்ள கண்காட்சி கூடங்களில் வைக்கப்பட்டுள்ளன என 30 பக்கங்களுக்கு அவர் சொல்லியிருக்கும் எண்ணிக்கை குற்ற உணர்வு கொள்ள வைக்கிறது...
பழனியை சேர்ந்தவர் என்பதால் பழனி மலைத்தொடரின் சிறப்புகள் , அதற்கு நம்மால் நடக்கும், நடக்கப்போகும் அபாயங்கள் பற்றி சொல்கிறார். நதி நீர் இணைப்பு, ஒலி மாசு, யானைகள் என பல அத்தியாயங்களில் சூழலியல் ஆபத்தை விளக்குகிறார். குறிப்பாக ஊடகங்கள் தங்கள் செய்திகள் மூலம் எப்படி காட்டுயிர்களை அந்நியப்படுத்தி மனிதனுக்கு எதிரியாக்குகிறார்கள் என சாடியுள்ளார்.
நம் வருங்கால சந்ததிக்கு ஒரு நல்ல சுற்றுச்சூழல் ஏற்படுத்தி தர நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும் விளக்கியிருக்கிறார். நம் தவறுகளை திருத்திக் கொள்ள எச்சரிக்கை செய்கிறார்.
இந்த புத்தகத்தை www crownest.in என்ற இணையதளத்தில் தொடர்பு கொண்டு வாங்கலாம்
0 Comments