பறவைகளின் உயிர்ச்சூழல்

நண்பர்கள் கொடுத்த உற்சாகமும், சூழலியலார்கள் கொடுத்த நம்பிக்கையும் தொடர்ந்து பறவைகளை கவிதைகளாக்கும் முயற்சிக்கு வழிவகுத்தது. அதுவே "பறவைகளின் உயிர்ச்சூழல்" எனும் நூலாக உருவெடுத்துள்ளது. "தூவி" நூலில் அறுபத்தி இரண்டு பறவையினங்கள் பற்றி கவிதைகள் எழுதியிருந்தேன். அது போலவே இந்த நூலிலும், "தூவி" நூலில் இடம்பெறாத வேறு அறுபத்தி இரண்டு பறவையினங்கள் பற்றி கவிதைகள் எழுதியிருக்கிறேன். எனவே "தூவி" நூலை வாசித்தவர்களுக்கும், வாசிக்காதவர்களுக்கும் "பறவைகளின் உயிர்ச்சூழல்" நல்ல அனுபவத்தை தரும் என நம்புகிறேன்.

இந்த நூலை வாசித்துவிட்டு அணிந்துரை எழுதிக் கொடுத்த திரு.கோவை சதாசிவம் அவர்களுக்கும், திரு.விக்ரம் குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த  நன்றியை தெரிவித்திருக் கொள்கிறேன்.  இந்த நூலை வெளியிட விருப்பம் தெரிவித்த காக்கைக்கூடு பதிப்பகத்திற்கும், இந்த நூலுக்காக படங்களை கொடுத்து உதவிய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

கோவை புத்தகத் திருவிழாவில் இந்த நூல் வெளியாகும்.

Post a Comment

1 Comments