யாருக்கானது பூமி?, தூவி, பல்லுயிர்களுக்கானது பூமி நூல்களின் மூலம் நான் பெற வேண்டிய தொகையை முழுவதுமாக PHCC (Palni Hills Conservation Council) அமைப்பிற்கு நேரடியாக பதிப்பகத்தின் வாயிலாகவே கொடுக்கிறேன். இந்தப் பணம் பழனிமலைத் தொடரில் உள்ள சோலை காடுகளை பாதுகாக்கவும் வளப்படுத்தவும் பயன்படுத்தப்படும்.
எனவே நீங்கள் வாங்கும் ஒவ்வொரு புத்தகமும் மரமாக மாறும்.
1 Comments
தஞ்சாவூர் விதையால் ஆயுதம் செய் அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர் ஐயா கோ.முரளி அவர்களின் இல்ல திருமண வரவேற்பு மற்றும் தமிழினியாள் நடராஜன் நவ 26, மைத்துனர்களின் குழந்தைகள் ஈசானா ஆதித்ரி நவ 02, ஹன்சிகா ஆதித்ரி நவ 24, பிரனவ் நவ 27 ஆகியோரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக விதையால் ஆயுதம் செய் அமைப்பின் ஏற்பாட்டில் 24/11/2024 அன்று காலை 09.30 மணியளவில் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை - மாதாக்கோட்டை சாலைகளுக்கு இடைப்பட்ட புறவழிச்சாலையில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்வுக்கு வரும் சிறார்களுக்காக வாங்கப்பட்ட நூல்கள் மூலம் பழனி மலைத்தொடரில் மரமாகும் என்பது அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
ReplyDelete