நண்பர்கள் அனைவரும் வாசித்து முடித்த நிலையில் பணிச்சுமை காரணமாக இன்று தான் வாசிக்க இயன்றது - *பல்லுயிர்களுக்கானது பூமி* . நமது நண்பர் சதீஸ் மிகசரளமான நடையில் கட்டுரைகளை எழுதி தொகுத்துள்ளார். பறவைகளை படம் பிடிக்கிறேன் என பறவையியலாளர்கள் செய்யும் தவறுகளை தவறாமல் சுட்டிக்காட்டி கண்டித்துள்ளதும், தவறான அறிவியல் தகவல்களை அதுதொடர்பான வல்லுனர்களிடம் கலந்தாலோசிக்காமல் வெளியிடும் ( அறிய வெளிநாட்டு பறவைகள்) ஊடகங்களை விமர்சனம் செய்ததும் தற்போதைய காலகட்டத்தில் தேவையானதே . அரை நூற்றாண்டுகளாக மரம் கடத்தும் வில்லன்கள் (தமிழ்ப் பதம் என்ன 🤔 )போய் இப்போது கதாநாயகனும் செஞ்சந்தனம் கடத்துகிறார். அதை நியாயப்படுத்தவும் முயற்சிக்கின்றனர். சதீஸ் கூறியது போல சூழலியல் குறித்து ஆங்காங்கே பேசிய திரைப்படங்கள் உள்ளன, தனியான படைப்பு எதுவும் வெளிவந்துள்ளதா என சிந்தித்து கொண்டிருக்கிறேன். தற்போது சூழல் சார்ந்த சில இணைய தொடர்கள் தமிழில் வந்துள்ளது நல்ல முயற்சி. மொத்தத்தில் சிந்தனையை தூண்டுவதற்கு, நல்ல சூழலியல் புத்தகத்தை வழங்கியுள்ளார். அவரது அடுத்த வெளியீடு இன்னமும் சுவையுள்ளதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.
கிருஷ்ணகுமார்,
மதுரை
0 Comments