கானமயில் [Great Indian Bustard]

புற்கள் நெடுக வளர்ந்திருக்கும்

வறண்ட மணற்பரப்பினிலே 

ஒற்றை முட்டை இட்டுவைத்து 

காத்திருக்கும் கானமயில். 


பாலைநிலச் சூழலிலே 

பல்லுயிர்கள் பல உண்டு. 

உயரப்பறக்கும் பறவைகளிலே 

அதிக எடை இதற்குண்டு.


மேயவரும் மாடுகளால் 

முட்டைகள் உடைந்துவிட, 

தப்பித்த சில குஞ்சுகள் 

தெரு நாய்களிடம் சிக்கிவிட, 

சுருங்கிப்போன வாழிடத்தில் 

தப்பிப்பிழைப்பது ஒரு சிலவே.


துப்பாக்கி வேட்டைக்கு 

சில பறவைகள் செத்துவிழ, 

உயிர்பிழைத்து வாழும் சில 

மின்கம்பிகளில் மோதிவிழ, 

உலகின் பெரிய தேசங்களில் 

ஒன்றான இந்தியாவில், 

மீதமிருக்கும் கானமயில்கள் 

ஒரு நூறு மட்டுமே.

ஆம், ஒரு நூறு மட்டுமே.


எதிர்காலம் எழுதுமொரு 

வரலாறு.

அதில் கானமயில்

அற்றுவிடக்கூடாது. 


 - பா.சதீஸ் முத்து கோபால் 


லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பாடம்  செய்யப்பட்ட கானமயில் 

Post a Comment

5 Comments

  1. So sad 😞 This is an absolutely beautiful creature 🧡 We need to conserve and protect them. Next generation won’t even see this lovely creature..

    ReplyDelete
  2. அருமையான வரிகள் 👌

    ReplyDelete
  3. அருமை.. அவைகளின் வாழ்வை மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் அரசு முன்வரவேண்டும்.

    ReplyDelete
  4. நன்று. உரைக்கும் உண்மைகள்.

    ReplyDelete