தூவி நூல் பற்றி எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் (விமர்சனம் - 3)

தூவி நூல் பற்றி எழுத்தாளர் நக்கீரன் அவர்கள். அவருக்கு என் நன்றிகள்.


தோழர் பா. சதீஷ் முத்துகோபால் Satheesh Muthu Gopal  பறவை நோக்கலில் ஆர்வம் கொண்டவர். இதற்கு முன்பு யாருக்கானது பூமி? என்றொரு நூலை எழுதியுள்ளார்.  தற்போது, 'தூவி' என்றொரு கவிதை தொகுப்பினைத் தந்துள்ளார். 


பறவைகளின் நடத்தை பண்புகளை ஒரு கட்டுரையாக மட்டுமே வடிக்க முடியும் என்று நினைத்திருந்தேன். ஆனால்,  அதைக் கவிதைகளாக மாற்றியிருக்கிறார் தோழர். இது ஒரு வரவேற்கத்தக்க முயற்சி. குறிப்பாக குழந்தைகளும் புரிந்து கொள்ள எளிமையாக வடித்துள்ளார்.  தோழரின் முயற்சிக்குப் பாராட்டுகள். 


ஒரு கவிதை... 


கூண்டில் இருக்கும்

பறவைக்கு 

இரை கொடுக்கலாம்

வானை எப்படிக்

கொடுப்பது? 


தூவி

பா. சதீஷ் முத்து கோபால்

காக்கைக்கூடு

விலை: ₹90

நூலைப் பெற: 9962540042



தூவி நூலை ஆன்லைனில் பெற : https://crownest.in/product/thuvi/

Post a Comment

0 Comments