இந்தோனேசியாவில் காணப்பட்ட மூன்று வகை புலி இனங்களில் பாலி மற்றும் ஜாவன் புலிகள் முற்றிலுமாக அழிந்துவிட்ட நிலையில் தற்போது மீதமிருப்பது சுமத்ரா புலிகள் மட்டுமே. இவற்றின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே உள்ளது.
பருவநிலை பிறழ்வு [Climate Change] காரணமாக ஏற்படும் வெள்ளம், வறட்சி, இயற்கை பேரிடர்களான சுனாமி, மனிதர்களால் ஏற்படுத்தப்படும் காட்டுத்தீ, கால்நடைகளுக்காக காடுகளை அழிப்பது என பல காரணங்களால் சுமத்ரா காடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. செம்பனை மரங்களில் பெறப்படும் எண்ணெய் [Palm Oil] அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதும் காடுகள் அழிப்புக்கு காரணமாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது இரண்டு சுமத்ரா புலிகள் கொல்லப்பட்ட செய்தியை நாளிதழில் பார்த்தேன். மனிதர்களால் வைக்கப்பட்ட வளையத்தில் சிக்கி தப்பமுடியாமல் இரண்டு புலிகள் இறந்துவிட்டன.
பத்து ஆண்டுகளுக்கு முன்பாக இதே போன்ற சம்பவம் நடந்ததை என்னுடைய வலைப்பூவில் பதிவு செய்திருந்தேன்.
சிங்கப்பூர் நாளிதழில் வெளியான செய்தி |
2 Comments
vethanaiyana seyal.
ReplyDeleteசுமத்ரா காட்டுமிருகத்தின் நிலையும் மோசமாகவே உள்ளது.
Delete