ஆபத்தில் அணில் இனங்கள்

எப்போது பழனி மலைத் தொடரில் பயணித்தாலும் பறவைகளோடு சேர்த்து நான் தவறவிடாமல் பார்ப்பது அணில்களைத் தான். "Malabar Giant Squirrel" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மலை அணிகளை மேல் மலைப் பகுதிகளிலும், "Grizzled Giant Squirrel" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சாம்பல் அணில்களை கீழ் மலைப் பகுதிகளிலும் காணலாம். ஒரு சில இடங்களில் பறக்கும் அணில்களும் (Indian Giant Flying Squirrel) பதிவு செய்யப்பட்டுள்ளன.

Malabar Giant Squirrel

Indian Giant Flying Squirrel.
Photographer: Raveendran Natarajan


Grizzled Giant Squirrel

காட்டுத்தீ மற்றும் சுற்றுலா வளர்ச்சி ஆகிய காரணங்களால் இவற்றின் வாழிடம் சுருங்கி வருகின்றது. தெரு நாய்களாலும் இந்த அணில் இனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. விரிவடைந்து வரும் கொடைக்கானல் நகரமும் பெருகி வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையும் காட்டுயிர்களுக்கு ஆபத்தானது. சில நேரங்களில் சாலை விபத்துகளின் மூலமாக அணில்கள் இறப்பதும் நடக்கிறது. 

Grizzled Giant Squirrel - Road Kill

Indian Palm Squirrel - Road Kill


Malabar Giant Squirrel hunted by Street Dog in Kodaikanal.
Photographer : Pringly

இப்படியான சூழ்நிலையில் பழனி மலைத் தொடரின் ஒரு பகுதியில் அழிய வாய்ப்புள்ள இனமாக கருதப்படும் நீலகிரி அணில்களை "Nilgiri Stiped Squirrel" பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு மாலை நேரத்தில் அவை இரை தேடிக் கொண்டிருந்தன. ஆனால் அந்த இடம் சாலை ஓரம் மது அருந்துபவர்களின் விருப்பமான இடமாக இருந்தது. நெகிழி குப்பைகளுக்கு இடையே இந்த அணிலை கண்டேன். 

Nilgiri Striped Squirrel

Nilgiri Striped Squirrel

வனப் பகுதிக்குள் செல்லும் போது சாலை ஓரங்களில் அமர்ந்து உணவருந்துவதும், மது அருந்துவதும் தவறென்று வனத்துறை பல்வேறு இடங்களில் பலகை வைத்திருந்தாலும் அதை யாரும் மதிப்பதாக தெரியவில்லை. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் முறையான அபராதம் வசூலித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே இந்த அணில்களின் வாழிடத்தை பாதுகாக்க முடியும். 

Post a Comment

9 Comments

  1. //தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்// 👌
    அருமை சகோ... பொதுமக்களின் மனதில் மாற்றம் கொண்டு வர வேண்டும். முக்கியமாக மாணவர்களுக்கு சூழலியல் கல்வி அளிக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். சுற்றுலா மன நிலையில் வருபவர்கள் சொல்வதை கேட்கவே தயாராக இல்லை. அவர்கள் ஒரு குதூகல அவசர நிலையில் இருப்பார்கள். கடுமையான அபராதம் அவசியம்.

      Delete
  2. காட்டுயிர்களின் மீதான தங்களின் பற்று அளப்பறியது..தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. காட்டில் வாழும் உயிர்களின் நலனில்
    அக்கரை காட்டும் உங்களின் மனம்
    பல்லாண்டு வாழ்க, வளத்துடன்.
    மக்களுக்கு எவ்வளவுதான் விழிப்புணர்வு கொடுத்தாலும் அவர்களில் சிலர் இவைகளை பொருட்படுத்தாமல் தன் ஈனச் ச்யல்களை செய்தே வருகின்றனர்.
    அவர்கள் இனியாவது சற்று மனிதத்தை
    இந்தகாட்டுயிர்களிடம் காட்டிட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. கொடைக்கானல் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்.

      Delete
  4. Beautiful write up and it’s very sad to see these gentle giant squirrels suffer because of the repeated mistakes and road kills by tourist who throng the hill station. People are simply unaware of the nature and life around them.

    ReplyDelete