அன்றைய தினம் வழக்கத்தை விட பனி அதிகமாக இருந்தது. இருப்பினும் திட்டமிட்டபடி பறவைகளை தேடி, அன்றைய பொழுது விடியும் போதே கிளம்பினேன். பத்து அடி தூரத்தில் இருப்பவர்கள் கூட தெரியாத அளவிற்கு பனி அதிகமாக இருந்தது. நான் முத்தநல்லூர் ஏரிக்கரையில் விடியலுக்காக காத்திருந்தேன்.
காலை ஒன்பது மணிக்கே சூரியனின் கதிர்கள் வெளியே தெரியத் தொடங்கியது. வெளிச்சம் வரத் தொடங்கிய சில நிமிடங்களில் பறவைகளின் கூச்சல் அதிகரிக்கத் தொடங்கியது. பறவைகள் பறக்கத் தொடங்கினால் அவற்றை அவதானிக்கவோ படம் எடுக்கவோ வெளிச்சம் போதுமானதாக இல்லை.
வெளிச்சம் வர வர ஏரியில் இருந்த மரங்களில் அமர்ந்திருந்த நீர்க்காகங்கள் தெரியத் தொடங்கின.
அருகில் இருந்த புதரில் நீண்ட நேரமாக பாடிக் கொண்டிருந்த கதிர்க்குருவி கண்களுக்கு தெரியத் தொடங்கியது. அதை படம் எடுக்கத் தேவையான வெளிச்சமும் வந்துவிட்டது.
மரங்களில் இருந்த நீர் சிறிது நேரம் சொட்டிக்கொண்டே இருந்தது. புற்களின் மீதிருந்த பனித் துளிகள் புத்துணர்ச்சியை கொடுத்தது. சிலந்தி வலை ஒன்றில் படிந்திருந்த பனித் துளிகள் கூட அப்படியே இருந்தது. அங்கு வந்து அமர்த்த கொண்டைக்குருவி சில நொடிகளில் பறந்துவிட்டது.
சில நிமிடங்களில் வெயில் நன்றாக வரத் தொடங்கியவுடன் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கத் தொடங்கின. ஒரு புதரில் இருந்து வெளிவந்த இரண்டு கீரிகள் என்னை கவனித்ததும் ஓடி மறைந்தது.
4 Comments
Super 🤩 Good one 👌🏻👏🏻
ReplyDeleteThanks Karthi
Deleteஅருமை
ReplyDeleteநன்றிங்க
Delete