நீர்நிலை என்பது தவளைகளுக்கு வாழிடம் தான், உணவல்ல என்ற செய்தியோடு இந்த நூலை தொடங்குகிறார், இதன் ஆசிரியர் திரு.கோவை சதாசிவம் அவர்கள். ஆற்றில் இருந்து அள்ளிய மணலோடு வீட்டுக்கு வந்த தவளை நிகழ்த்தும் உரையாடலை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். தவளையுடைய உயிர் சுழற்சி, இனப்பெருக்க முறை, உணவு மற்றும் வாழிடம் ஆகியவரை எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் சுருக்கமாக பேசுகிறது இந்த நூல்.
"தலைப்பிரட்டைகளுக்கு செய்த தீங்கு மலேரியா, டெங்கு, சிக்குன் குன்யாவாய் உங்களை வாட்டுகிறது. இயற்கைக்குச் செய்த தீங்கு உலகளாவிய புவி வெப்பமயமாய் சின்னஞ்சிறு உயிர்களை வதைக்கிறது" என தவளையின் குரலாகவே பதிவு செய்திருக்கிறார்.
நீர் நிலைகளில் இருக்கவே வேண்டிய உயிர் காற்று, நீர் நிலைகளின் மாசுபட்டால் இல்லாமல் போனதும் அதன் மூலமாக தவளைகள் போன்ற நீர் வாழ் உயிரினங்கள் வாழிடம் இழப்பதையும் பதிவு செய்துள்ளார்.
தவளைகளின் இனப்பெருக்க முறை என்பது நீரை நம்பியே இருக்கிறது. ஆனால் தற்போது நிகழும் சூழல் சீர்கேடுகளால தவளை இனங்கள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை தவளையின் குரல் மூலமாகவே ஒலிக்கச் செய்திருக்கிறார் திரு.கோவை சதாசிவம் அவர்கள்.
இந்த நூலை காக்கைக்கூடு இணையத்தளத்தில் பெற முடியும்.
https://crownest.in/product/thavalai-frog-book-intamil-kovai-sadhasivam/
2 Comments
Good one 👏🏻 beautiful description 👌🏻
ReplyDeleteSure, small book, but good one.
Delete