யாருக்கானது பூமி? - விமர்சனம் - 4

நன்றி காந்திமதி. 

-------‐--------


நூல் : யாருக்கானது பூமி ?

நூலாசிரியர் : பா. சதீஸ் முத்து கோபால்

பதிப்பகம் : காக்கைக் கூடு

பக்கங்கள் :207


விலங்கு-பறவை-மனிதர்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த காலகட்டத்தை தவிர்த்து, மனிதன் தனியா தனக்கான இடங்களை உருவாக்க முயலும்பொழுது உருவானது இட அழிப்பு. அவை இன்றுவரை பல வடிவங்களில் வளர்ந்து நிற்கிறது.


பறவைகள், விலங்குகள் குறைவதற்கு மிக முக்கிய காரணம் அவற்றின் வாழிட அழிப்பே ஆகும்.


மனிதர்கள் குரல் உயர்ந்து, பறவைகள் குரல் தாழ்ந்து காணப்படும் இந்த காலத்தில் சதீஸ் முத்து கோபால் பறவைகளையும், விலங்குகளையும் தேடி சென்று அவற்றின் குரல்களை கேட்டு வருகிறார்.


நிலம், நதிகள், வானம், கடல், மலைகள் யாவுமே உயிர்கள்வாழ இயற்கை படைத்தது.....


"பறவையைக்கண்டான், விமானம் படைத்தான்! "என்கிற திரையிசைப்பாடல் பறவைகளின் பறத்தலை வியக்கிறது. மனிதனுக்குள் பறக்கும் ஆவலைத் தூண்டுகிறது! 

பறவையைக் கண்டு விமானம் படைத்த மனிதன் பறவைகளின் பங்களிப்பை உணரவில்லை....


பறவைகளைப் பார்ப்பதும், அதன் வாழ்வை, பழக்கவபழக்கவழக்கங்களை புரிந்து கொள்வதும்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அடிப்படை. அதன் பிறகுதான் "யாருக்கானது பூமி?" என்கிற கேள்வி பிறக்கும். விடையும் கிடைக்கும்!


நாம் பார்த்து மகிழ்ந்த இயற்கையை வரும் தலை முறைக்கும், வளரும் தலைமுறைக்கும் கையளிக்க வேண்டும்


சூழலை காக்க, காடுகளை காக்க, காட்டுயிர்களை காக்க, நம் தலைமுறைகளை காக்க நாம் சிறிய மாற்றங்களையாவது நமக்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.....


இயற்கையோடு இணைந்து வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றை சங்க இலக்கியங்களில் அறிய முடிகிறது.....


எல்லா உயிர்களுக்குமான இந்த பூமியை நாம் அபகரிக்க நினைத்தால் அது மனித இனத்திற்கே பேராபத்தாக முடியும்...


நம் அடுத்த தலைமுறைக்காக இந்தப் புவியை காக்க வேண்டிய கடமை உணர்வும் ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் இருக்க வேண்டும்.....


காடு, சரணாலயம், மலை போன்ற இடங்களுக்கு பயணம் சென்று அங்கு ஏற்பட்ட அனுபவங்களை விரிவாக எழுதி செல்கிறார். ....


பலவித பறவைகளை நமக்கு அறிமுகப்படுத்தி படங்களுடன் தமிழ், ஆங்கில பெயர்களை கொடுத்து இருப்பது சிறப்பு.


காடு அழிப்பு, புலிகள் கணக்கெடுப்பு, பறவைகளை பார்த்தல், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.... 


சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட வேண்டும் என்ற ஆவலும், அதைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை  ஏற்படுத்த வேண்டும் .....


நம்மால் இயன்றதை செய்வோம்..... இயற்கையை பாதுகாப்போம்......


Post a Comment

0 Comments