எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரை தொகுப்பில் என்னை அதிகம் கவர்ந்தது "காண் என்றது இயற்கை".
இயற்கை பிரமாண்டமானது தான். ஆனால் இயற்கையில் பெரியது சிறியது என எதுவும் இல்லை. எல்லாமே ஒன்றோடொன்று தொடர்புடையது. எல்லாமே அவசியமானது. அளவில் வேண்டுமானால் பெரியதாகவும் சிறியதாகவும் இருக்கலாம். மனித மனம் பெரிதாக தெரியும் எதையும் கவனிப்பது போல, ரசிப்பது போல சிரியன எதையும் கண்டுகொள்வதில்லை. ஆனால் எஸ்.ரா சிறியதை கவனிக்கிறார். அதை ரசிக்கிறார். அவற்றோடு உரையாடுகிறார். மனிதன் பிரமாண்டமானது என எதை நினைக்கிறானோ அதை சிறிய செடி ஒன்றின் துணையோடு பகடி செய்கிறார். சிறு செடி என்ற கட்டுரையில் சொல்கிறார்.
சிறுசெடியின் இலைகள் கச்சிதமானவை. அவற்றைச் செய்த இயற்கையின் கைகள் நுட்பமானவை. அதைப் போல இன்னொன்றை அது செய்வதேயில்லை. நகல் என்பது இயற்கையில் இல்லை.
விடியற்காலை நேரத்து மலை பற்றி ஓரிடத்தில் எழுதுகிறார்.
குழந்தையை விழிக்க வைப்பது போன்று ஒளி மலையை எழுப்புகிறது. விழித்துக்கொண்டபடியே அம்மா எழுப்புவதற்காக காத்துக் கிடக்கும் குழந்தை போன்றுதான் மலையிருக்கிறது.
பகல் சொற்களின் விளைநிலம். இரவு சொற்களற்ற தியானவெளி.
மின்சாரம் இல்லாத அறை என்பதால் பூமியின் அடியில் படுத்திருக்கிறோமோ என்ற உணர்வும் வந்தது.
ஒரு மரத்தின் நிழல் உங்களை என்ன செய்யும்? ஆனால் எஸ்.ரா எழுதுகிறார்.
ஆலமரத்தின் நிழலடியில் நின்று கொண்டிருந்தேன். நிழல் ஒரு பெருங்குளம் போலவும் அதன் உள்ளே தனியே நான் நீந்திக்கொண்டிருப்பது போன்றும் உணர்ந்தேன்.
யானையை பற்றி சொல்லும் போது "மஹா மௌனம் கண் முன்னே ஊர்ந்து போகிறது" என்கிறார்.
இந்த நூலை வாசிக்கும் போது ஒரு பேரருவியின் இரைச்சலோ, தன் இரையை தாக்க வரும் வல்லாறு ஒன்றின் வேகமோ என எதையும் உணர முடியாது. மாறாக ஒரு சிறிய ஓடையொன்றின் எந்த அவசரமும் இன்றி நிதானமாக பறந்து கொண்டிருக்கும் ஒரு தட்டானை போல உணர்வீர்கள். அது தான் தொடர்ந்து அவருடைய எழுத்துக்களை வாசிக்கவைக்கிறது.
7 Comments
மிக அழகான எழுத்துக் கையாடல்களை எடுத்தியம்பியிருக்கிரார் திரு.எஸ்.ரா. அவர்கள். அதனை குறிப்பிட்டுச் சொல்லியிருக்கும் உங்களின் எழுத்து நடை தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு நந்தவனத்தில் நுழைந்து சென்ற திருப்தி எனக்குள்.
ReplyDeleteபாராட்டுக்கள் தோழர் சதீஸ் அவர்களே.
மிக்க நன்றி...!!
Deleteமிக அழகான எழுத்துக் கையாடல்களை
ReplyDeleteஎடுத்தியம்பியிருக்கிரார் திரு.எஸ்.ரா. அவர்கள். அதனை குறிப்பிட்டுச் சொல்லியிருக்கும் உங்களின் எழுத்து நடை தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு நந்தவனத்தில் நுழைந்து சென்ற திருப்தி எனக்குள்.
பாராட்டுக்கள் தோழர் சதீஸ் அவர்களே.
நன்றி நண்பரே
Deleteசதீஷ் சரியாக நியாபகம் இருக்குமானால் உங்களுது அறிமுகம் கிடைத்தது 2009 என்று நினைக்கிறன், உங்களது தமிழ் பற்று மற்றும் காடு காடு சார்ந்த வாழ்வியல், புலிகளின் மீதான ஆர்வம், சிதறாத எழுத்துக்கள் கவிதை தொகுப்பை தமிழ் சங்கத்தில் ராமகிருஷ்னன் கையால் வெளியிட்டது முதலான நினைவுகள் பசுமையாக உள்ளத.உங்களது தமிழ் சார்ந்த பணிகள் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!
ReplyDeleteமிக்க நன்றி சரவணன்..!! உங்களை போன்ற நண்பர்களின் ஆதரவால் தொடர்ந்து எழுதுகிறேன். இயங்குகிறேன்.
Deleteசிறப்பான சொல்லடால வாழ்த்துக்கள்
ReplyDelete