சோலை எனும் வாழிடம் : திரு.தியடோர் பாஸ்கரன்

திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள் எழுதிய இயற்கையியல் கட்டுரைகளின் தொகுப்பு "சோலை எனும் வாழிடம்". மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரித்தான சோலைக் காடுகளை பற்றியும் அங்கு வாழும் உயிர்களையும் பற்றிய ஒரு கட்டுரையே "சோலை எனும் வாழிடம்". தற்போது சோலைக் காடுகள் சந்தித்து வரும் பிரச்சனைகளையும் அதனால் அங்கு வாழும் உயிர்கள் எவ்வாறு சிக்கலை சந்திக்கின்றன என்பது பற்றியுமான விரிவான கட்டுரை.

பசுமையாக இருக்கும் காடுகளில் மட்டுமே உயிரினங்கள் வாழும் என்ற பொதுவான எண்ணத்தை மாற்றும் விதத்தில் அமைந்திருக்கிறது "பாலை எனும் வாழிடம்" என்ற கட்டுரை. பாலை என்பது பல்லுயிர்ச்சூழல் மிகுந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறார் ஆசிரியர். தமிழ் நாட்டிலும் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பாலை நிலப்பகுதிகளில் (பாலைவனம் அல்ல) வாழ்ந்த/ வாழும் உயிரினங்களை பற்றி பதிவு செய்திருக்கிறார். 

நரி, உடும்பு, காட்டுப்பூனை, கல் கௌதாரி, வெளி மான் போன்ற உயிரினங்களை நாம் பாதுகாக்க தவறியதையும், அதற்கான அடிப்படை காரணம் இந்த நிலப்பகுதிகள் wasteland-ஆக கருதப்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறார். இந்த அலட்சியத்தாலும், ஆங்கிலேயர்கள் காலத்தில் அதிக அளவில் வேட்டையாடப்பட்டதாலும், கால்நடை மேய்ச்சல்களாலும் கானமயில் தமிழ் நாட்டில் முற்றிலும் அற்றுப்போனதையும் குறிப்பிடுகிறார்.


இன்றளவும் தமிழ் நாட்டில் பாதுகாக்கப்பட்ட பாலை  நிலப்பரப்பு என எதுவும் இல்லை. ஆனால் அது அவசியம் என்பதை இந்த நூல் உணர்த்துகிறது. 

டிஜிட்டல் காமிரா வரவுக்கு பிறகு  காட்டுயிர்கள் சந்திக்கும் சிக்கலை விளக்கும் கட்டுரையும் முக்கியமானது. மூட நம்பிக்கையால் ஆந்தை இனங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பது போன்ற கட்டுரைகள் கவனம் ஈர்க்கின்றன.

பல்லுயிர்ச்சூழலை பாதுகாப்பது குறித்தும் அதன் அவசியம் குறித்தும் மிக நுணுக்கமாக எழுதப்பட்ட புத்தகம் இது.

இந்த நூலை வாங்க: https://www.udumalai.com/solai-ennum-validam.htm

Post a Comment

0 Comments