அமெரிக்க அதிபர் தேர்தல் - கவிதை

அமெரிக்க அரசனுக்கு 
பருவநிலை பிறழ்வு பற்றிய 
கவலை ஏதுமில்லை. 

பெருமழையோ புயலோ 
உருகும் பனியோ 
அதிசயம் இல்லை உங்களுக்கு. 

பொங்கும் கடலோ வெயிலோ 
காட்டுத்தீயோ
செய்தி மட்டுமே உங்களுக்கு.

தனிமனித நுகர்வில் 
உங்கள் தேசத்து மாநகரம் 
அதிசயங்களை நிகழ்த்துகிறது.

புரட்டிப்போட்ட பேரிடரால் 
மூன்றாம் தேசத்து மாநகரம் 
பசியால் துடிக்கிறது. 

நிலக்கரியை எரித்துக்கொண்டே 
நீங்கள் நியாயம் 
பேசுங்கள். 

மூழ்கும் சிறுதீவின் 
கடற்கரையில் 
அடைகாக்க இடம் தேடும் 
தாய் பறவைக்கு 
என்ன பதில் சொல்வீர்கள் 
அரசனே. 






Post a Comment

2 Comments

  1. Fantastic conclusion 😍🔥👌🏻 மூழ்கும் சிறுதீவின்
    “ கடற்கரையில்
    அடைகாக்க இடம் தேடும்
    தாய் பறவைக்கு
    என்ன பதில் சொல்வீர்கள்
    அரசனே “

    ReplyDelete