Sumatran Rhinoceros - மலேசியாவின் இழப்பு [Malaysia]

ஜாவா காண்டாமிருகங்களை போலவே சுமத்ரா காண்டாமிருகங்களும் தென் கிழக்கு ஆசியாவின் பல நாடுகளிலும் காணப்பட்டன. தற்போது இந்தோனேசியாவில் சிறு சிறு குழுக்களாக 80-க்கும் குறைவான எண்ணிக்கையில் அழிவின் விளிம்பில் உள்ளன.  

பருவநிலை பிறழ்வு [Climate Change] காரணமாக ஏற்படும் வெள்ளம், வறட்சி, இயற்கை பேரிடர்களான சுனாமி, மனிதர்களால் ஏற்படுத்தப்படும் காட்டுத்தீ, கால்நடைகளுக்காக காடுகளை  அழிப்பது என பல காரணங்களால் இதன் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் மிக முக்கிய காரணம் வேட்டையே. சுமத்ரா காண்டாமிருகம் மருத்துவ குணமுடையது என்ற மூடநம்பிக்கையின் காரணமாக அதிகளவில் தெற்காசியா முழுவதும் வேட்டையாடப்பட்டது.

மற்ற காண்டாமிருகங்களை ஒப்பிடும்போது அளவில் சிறியவை சுமத்ரா காண்டாமிருகம். 2015-ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து இவை முற்றிலும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இவற்றை பாதுகாக்க கடைசியாக எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. 

Taxidermy Specimen of Black Rhinoceros (Diceros bicornis) [Left] and Sumatran Rhinoceros (Dicerorhinus sumatrensis) [Right]
at London Zoological Museum


செம்பனை மரங்களில் பெறப்படும் எண்ணெய் [Palm Oil] அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் அதிக அளவில் காடுகள் அழிக்கப்பட்டு சுமத்ரா காண்டாமிருகத்தின் வாழிடம் சுருங்கி, அவை தற்போது தொடர்பற்று இருப்பது அழிவுக்கே வழிவகுக்கும் என கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே தற்போது இவற்றை காப்பதற்காக இவற்றை காப்பகங்களில் [Captive Breeding] வைத்து இனப்பெருக்கம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

அழிவின் விளிம்பில் இருக்கும் ஜாவா காண்டாமிருகம் மற்றும் சுமத்ரா காண்டாமிருகம் என இரண்டு இனங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு தற்போது இந்தோனேசியாவிடம் இருக்கிறது.

Sumatran Rhinoceros: IUCN Status: Critically Endangered

மேலும் :




Post a Comment

0 Comments