2010-ஆம் ஆண்டில் வியட்நாமில் வாழ்ந்த கடைசி ஜாவா காண்டாமிருகம் சுட்டுக் கொல்லப்பட்டது. கடைசியாக வியட்நாமில் இறந்து போன அந்த பெண் காண்டாமிருகம், தான் அந்த தேசத்தின் கடைசி காண்டாமிருகம் என்பதை அறிந்திருக்காது. ஆனால் அதன் தனிமை எத்தனை கொடுரூமானது. இன்று வரை பல தானியங்கி புகைப்படக் கருவிகளை [Camera Trap] வைத்தும் வியட்நாமில் இந்த காண்டாமிருகங்களில் இருப்பை உறுதி செய்ய முடியவில்லை. காட்டுயிர் பாதுகாப்பில் இது போன்ற உயிரினங்களை பாதுகாப்பதன் மூலம் அது வாழும் பெரும் நிலப்பரப்பை பாதுகாக்க முடியும். இதனால் அந்த பகுதியின் பல்லுயிர் சூழல் பாதுகாக்கப்படும்.
Taxidermy Specimen of Javan Rhinocerous at Zürich Zoological Museum |
இன்றும் 100-க்கும் குறைவான எண்ணிக்கையில் இந்த ஜாவா காண்டாமிருகம் இந்தோனேசியாவின் ஜாவா தீவில் மிகக் குறுகிய இடத்தில் காணப்படுகின்றன. தற்போதும் கால்நடை வளர்ப்பு ஜாவா காண்டாமிருகங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. கால்நடைகள் மிகக் குறுகிய இடத்தில் மிச்சமிருக்கும் இவற்றின் வாழிடத்தோடு போட்டிபோட வாய்ப்புள்ளது. எனவே உணவுப் பற்றாக்குறை ஏற்படவும், கால்நடைகள் மூலமாக நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது. இருப்பினும் இந்த உயிரினத்தை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்படுகிறது.
வியட்நாம் தவற விட்ட வாய்ப்பை இந்தோனேசியா சரியாக கையாளுமா என்பதை காலம் உணர்த்தும்.
மேலும் :
0 Comments