|
Plains Zebra |
வரிக்குதிரைகளுக்கு ஏன் வரிகள் வந்தன ? ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து ஏன் இவ்வளவு உயரமாக இருக்கிறது ? யானை ஏன் பெரிதாக இருக்கிறது ? இப்படி குழந்தைகள் இயற்கை சார்ந்து கேட்கும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்கும் பெரும்பாலான பதில் பரிணாம வளர்ச்சியை சார்ந்தே இருக்கிறது. அவ்வாறு பரிணாம வளர்ச்சி மூலம் உயிரினங்கள் தங்களை தக்கவைத்துக்கொள்ள ஏற்படுத்திய மிகப்பெரிய ஆயுதம் உருமறைத் தோற்றம் [Camouflage]. இந்த படத்தில் இருக்கும் பக்கி [Jungle Nightjar] என்ற பறவை எவ்வாறு உருமறைத் தோற்றம் கொண்டுள்ளது என்று பாருங்கள்.
|
Jungle Nightjar : Thanks to Magesh Ramasamy for the Photograph
|
வரிக்குதிரைகளுக்கு வரிகள் இருக்க காரணம் வேட்டை விலங்குகளான சிங்கம், சிவிங்கப்புலி [Cheetah] போன்றவற்றிடம் இருந்து தப்பிக்கவே என்று நம்பப்பட்டது. அதன் உடலில் இருக்கும் வரிகள் வரிக்குதிரைகள் கூட்டமாக செல்லும் போது வேட்டை விலங்குகளை குழப்புமென்றும் அதனால் வரிக்குதிரைகள் தப்பிவிடும் என்றும் சொல்லப்பட்டது.
|
Gravy's Zebra
|
ஆனால் வரிக்குதிரைகளின் உடலில் வரிகள் இருக்க காரணம் சிங்கம் அல்ல. ஒரு வகையான ஈ [Tsetse Fly] என்றால் நம்ப முடிகிறதா? ஆப்ரிக்காவில் இருக்கும் இந்த ஈக்களின் கண்கள் [Compound Eyes] வரிகள் கொண்ட எந்த பொருளின் மீதும் சென்று அமர ஏற்றதாக இல்லை. அதிக நோய்த்தொற்றை ஏற்படுத்தி வரிக்குதிரைகளுக்கு சவாலாக இருத்திருக்கவேண்டிய இந்த ஈக்களிடம் இருந்து தப்பிக்கவே பரிணாம வளர்ச்சி இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறது.
|
Taxidermy Specimen of Plains Zebra at Berlin Natural History Museum |
6 Comments
மிக தெளிவான விளக்கம்,
ReplyDeleteபலருக்கும் தெரியாத நல்ல
அறிவியல் விளக்கம்.
சபாஷ் சதீஸ்... வாழ்த்துகள்.
தொடரட்டும் உங்கள்
இயற்கைச்சூழலின்
நெடும்பயணம்.
பாராட்டுக்கள்.
நன்றி நண்பரே 🙏
Deleteஇந்த காட்டுப்பக்கியை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருந்தது.. இந்த படம்எடுக்கும் போது நானும் அருகில் இருந்தேன் எனபது மகிழ்வான தருணம்...
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி 😊
Deleteபெரிய செய்தி,
ReplyDeleteஇப்போது தான் தெரியும்
Thanks Yasser
Delete