ஆஸ்திரேலியாவில் மனிதர்கள் குடியேறி 45000 ஆண்டுகள் ஆகிறது. ஆஸ்திரேலியாவுடன் இணைந்திருந்த தாஸ்மேனியா 12000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் உயர்ந்ததான் காரணமாக பிரிந்து போனது. தாஸ்மேனியா பிரிந்த போது அங்கு வாழ்ந்த மனிதர்கள் பிறகு தாஸ்மேனியா தீவைவிட்டு வெளியேறாமல் அங்கேயே வாழ்ந்துவந்தனர். அவ்வாறு அங்கு வாழ்ந்த மனிதர்களோடு தாஸ்மேனியா தீவில் வாழ்ந்த மற்றுமொரு உயிரினம் தைலசீன் (Thylacine).
19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் தாஸ்மேனியாவில் நுழையும் வரை அங்கே வாழ்ந்த மனிதர்கள் உலகின் மற்ற பகுதிகளை அறிந்திருக்கவில்லை. ஆங்கிலேயர்கள் நுழைந்த பிறகு அங்கிருந்த பழங்குடியின மக்கள் அழிக்கப்பட்டனர். அந்த மனிதர்களோடு அந்த தீவில் வாழ்ந்து வந்த தைலசீன் என்ற விலங்கும் அழிந்து போனது. ஆங்கிலேயர்கள் இந்த விலங்கின் மேல் இருந்த வரிகள் காரணமாகவோ என்னவோ "Tasmanian Tiger" என பெயர் வைத்தார்கள். உருவத்தின் அடிப்படையில் ஆங்கிலேயர்கள் விலங்குகளுக்கு இப்படி பெயர் வைப்பதுபுதிதல்ல. நல்ல வேலையாக வரிக்குதிரைகளுக்கு "African Tiger" என பெயர் வைக்கவில்லை. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தைலசீன் முற்றிலும் அற்றுப்போனது. பல லட்சம் ஆண்டுகளாக பரிணமித்த ஒரு உயிரினம் மனிதர்களின் வரவால் அற்றுப்போனது (Extinct).
Taxidermy Specimen Thylacine at Zürich Zoological Museum |
0 Comments