Passenger Pigeon - அமெரிக்காவின் இழப்பு [USA]


இந்த உலகில் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்த உயிரினங்களில் ஒன்று "Passenger Pigeon". 19-ஆம் நூற்றாண்டில் சில நூறு கோடிகளில் இருந்த பறவையினம் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முற்றிலும் அற்றுப் போனது (Extinct). மிக குறைந்த காலகட்டத்தில் (50 ஆண்டுகளில்) இந்த பறவையினம் அழிந்து போக இரண்டு காரணங்கள் முக்கியமாக சொல்லப்படுகின்றன. 1. வேட்டை. 2. காடழிப்பு. இந்த பறவையினத்தை காப்பதற்காக 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. 

கோடிக்கணக்கான பறவைகள் கூட்டமாக வலசை செல்லும் போது பகல் பொழுதை இருட்டாக்கும் அளவுக்கு இதன் எண்னிக்கை இருந்துள்ளது. எளிமையான வேட்டையில் சிக்கிக் கொண்ட இந்த பறவைகளை பெருமளவில் உணவுக்காக பயன்படுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட இந்த பறவையினம் அதே காலகட்டத்தில் காடழிப்பின் காரணமாக தன் வாழிடத்தையும் இழந்தது. சின்சினாட்டி மிருக காட்சி சாலையில் 1914-ஆம் ஆண்டு இவ்வுலகின் கடைசி "Passenger Pigeon" மறைந்து போனது. லண்டன்  வரலாற்று அருங்காட்சியகத்தில் ஆண் மற்றும் பெண் பறவையை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 

Taxidermy Specimen of Passenger Pigeon at London Natural History Museum

"Passenger Pigeon"-க்கு இணையாக இவ்வுலகில் அதிக எண்ணக்கையில் வேறு பறவைகள் இருந்தனவா என தெரியவில்லை. ஆனால் இத்தனை அதிக எண்ணைக்கையில் "Passenger Pigeon" பறவைகள் இருந்தும் அவற்றை அற்றுப் போகச் செய்ததில் இருக்கிறது மனிதனின் அறியாமையும் தோல்வியும். "Passenger Pigeon"-ஐ இந்த பூமி இழந்தது மனிதனால் நிகழ்ந்த வரலாற்று பிழை.


Post a Comment

14 Comments

  1. நாமறியாத வரலாற்றுப் பிழைகள் இன்னும் எத்தனை.... பூமிக்கு மணித அறிவின்மை சாபமாகி வருவதற்கு இதுவும் ஒரு சாட்சி... வேதனை

    ReplyDelete
  2. நாம் இக்காலகட்டத்தில் பறவைகளையும் காடுகளையும் காப்பது நம் கடமை ..🙏👍

    ReplyDelete
  3. நாம் இக்காலகட்டத்தில் பறவைகளையும் காடுகளையும் காப்பது நம் கடமை ..����

    ReplyDelete
  4. Thanks for the information Satheesh.Don't know when we will learn from our mistakes

    ReplyDelete
  5. அரிசோனாவில் மகன் வீட்டு தோட்டத்தில் போகன் வில்லா கொடிகளுக்கு இடையே அடிக்கடி கூடு கட்டும். இதன் முட்டைகளை பெரிய அண்டம் காக்கை, கழுகு கொத்தி சாப்பிட்டுவிட்டு போய் விடும். தப்பி பிழைத்து உயிர் வாழ்வது கொஞ்சம் தான். இதன் படங்கள் இதன் கூடு, முட்டை எல்லாம் படம் எடுத்து பதிவு செய்து இருக்கிறேன்.
    சரியான முறையில் கூடு அமைக்க தெரியாத பறவை.

    ReplyDelete
    Replies
    1. இவை முற்றிலும் அழிந்து விட்டன. நீங்கள் பார்த்தது வேறு பறவை இனமாக இருக்கலாம்.

      Delete
  6. Wow this is an mind blowing article of a species that is completely off book to many people !! Excellent write up on this extinct species 🙏🏼👏🏼

    ReplyDelete