"Huia" என்ற இந்த பறவை இனம் மட்டும் மற்ற எல்லா பறவை இனங்களில் இருந்து வேறுபட்டு உள்ளது. பெண் பறவையின் அலகு நீண்டதாகவும், ஆண் பறவையின் அலகு சிறியதாகவும் உள்ளது. நியூசிலாந்தில் வாழ்ந்த இந்த பறவை இனம் தற்போது அற்றுப்போய்விட்டது (Extinct). 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இந்த பறவையினம் முற்றிலும் அழிந்து போக மனிதர்களே காரணமாக இருந்தார்கள்.
Taxidermy Specimen of Huia pair at Zürich Zoological Museum |
Huia போலவே அலகில் வேறுபாடு கொண்ட பறவை இனம் வேறு எதுவும் இருக்கிறதா எனது தெரியவில்லை. பரிணாம வளர்ச்சியில் இந்த குறிப்பிட்ட பறவை இனத்திற்கு மட்டும் ஏன் பெண் பறவையின் அலகு ஆண் பறவையின் அலகை விட நீண்டிருக்க வேண்டும் ? என்ன காரணம் இருந்தாலும் ஏன் மற்ற பறவை இனங்களில் அது போல பரிணாம வளர்ச்சி நிகழவில்லை?
விடை தெரிந்தவர்கள் உங்கள் பதிலை பதிவிடுங்கள்.
மேலும் :
2 Comments
மிகச் சிறப்பான ஆய்வு தோழரே,
ReplyDeleteஎதற்காக இந்த ஹூயா என்ற பெயர் கொண்ட பெண் பறவையின்
அலகு நீளமாக இருக்கிறது என்பதையும்
நீங்களே சொல்லிவிடுங்கள்,
எங்களுக்கு தெரியவில்லை.
நீங்கள் சொல்வதால் தான் பலரும் தெரிந்து கொள்ள, நினைவில் வைத்துக் கொண்டு, பிறருக்கும் இதை
எடுத்துச் சொல்லி தெரியப்படுத்த இயலும் என்பது என் கருத்து.
- ராஜா முகம்மது.
நன்றி நண்பர்களே. தெரியப்படுத்துகிறேன்.
Delete