நேற்று (08-Feb-2015) மாலை கோதைமங்கலம் சென்றிருந்தேன். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு குளத்திற்கு தண்ணீர் வந்திருந்தது. மேலும் பறவைகளும் வந்திருந்தன. நேற்று நான் பார்த்த பறவைகள்:
- வீட்டுக் காகம் (House Crow)
- நாகணவாய் (Common Myna)
- பைங்கிளி (Rose Ringed Parakeet)
- பனங்காடை (Indian Roller)
- கானாங்கோழி (White Breasted Waterhen)
- மடையான் (Pond Heron)
- சிறிய கொக்கு (Little Egret)
- உன்னிக் கொக்கு (Cattle Egret)
- நாமக் கோழி (Common Coot)
- நீல தாழைக் கோழி (Purple Moorhen)
- தாழைக் கோழி (Purple Moorhen)
- புள்ளி மூக்கு வாத்து (Spot billed Duck)
- சிவப்பு மூக்கு ஆள்காட்டிக் குருவி (Red Wattled Lapwing)
- வக்கா (Black Crowned Night Heron)
- வெண் மார்பு மீன் கொத்தி (White Breasted Kingfisher)
- உள்ளான் (Common Sandpiper)
- பவளக்காலி (Common Redshank)
- சிறிய நீர்க் காகம் (Little Cormorant)
- மிளிர் அரிவாள் மூக்கன் (Glossy Ibis)
- செந்நாரை (Purple Heron)
- சாம்பல் இருவாச்சி (Indian Grey Hornbill)
- கருங்கரிச்சான் (Black Drongo)
- விசிறிவால் உள்ளான் (Common Snipe)
0 Comments