சென்னை என்றதும் எல்லோருக்கும் ஏதெனும் ஒரு ஞாபகம் வரும். ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் "பறவைகள்". சென்னையில் மட்டும் சுமார் 200 வகையான பறவைகளை பார்க்க முடியும். இவற்றில் இங்கேயே வாழும் பறவைகள் மட்டும் அல்லாது வலசை வரும் பறவைகளும் அதிகம். இதற்கு முக்கிய காரணம் இங்குள்ள பல்வேறு வகையான நீர் நிலைகள்.
கடற்கரை, கழிமுகங்கள், ஏரிகள், ஆறுகள், காடுகள் (நன்மங்கலம், கிண்டி), அலையாத்திக் காடுகள், குளங்கள், சதுப்பு நிலக் காடுகள் போன்றவற்றை நம்பி எண்ணற்ற பறவைகள் வருகின்றன. ஆண்டு தோறும் குளிர் காலங்களில் வரும் பறவைகளை சென்னையில் எளிதாக பார்க்க முடியும். ஆனால் சுற்றுச் சூழல் சீர்கேடு காரணமாக இந்த நீர் நிலைகள் யாவும் சீரழிந்து வருகின்றன.
சென்னையில் உள்ள பறவைகளை பற்றி மெலும் தெரிந்து கொள்ள :
http://en.wikipedia.org/wiki/Birding_in_Chennai
சென்னையில் ஒரு நாள் முழுதும் செலவு செய்தாலும் எல்லா இடங்களையும் பார்த்து விட முடியாது. எல்லா பறவைகளயும் பார்து விட முடியாது. சினிமாவுக்கு கொடுக்கும் முக்கியதுவத்தை, சென்னை மக்கள் தங்களுடைய நீர் நிலைகளை பாதுகாப்பதிலும் செலுத்த வேண்டும்.
1 Comments
ஹா.. ஹா... தலைப்பு - நல்ல குறும்பு...
ReplyDeleteமுடிவில் சிறப்பாக கருத்திற்கு வாழ்த்துக்கள்...