ஞெகிழிப் பைகள் (Plastic Bags)

நாம் எவ்வளவு பெரிய முட்டாள்கள் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஞெகிழிப் பைகள்.  தமிழ் நாட்டில் எந்த ஊருக்கு சென்றாலும் மக்கள் சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகிறார்கள். பால் வாங்கச் சென்றால் கூட பிளாஸ்டிக் பைகளில் தான் வாங்கி வருகிறார்கள்.

ஒவ்வொரு தெருவிலும் குப்பை மேடுகள் வளர்ந்து வருகின்றன. அந்த குப்பைகளில் பெரும்பாலும் இருப்பது மக்காத பிளாஸ்டிக் குப்பைகளே. வீட்டில் இருந்து பணம் எடுத்துச் செல்லும் எவரும் பைகளை எடுத்துச் செல்வதில்லை. தன் அடுத்த தலைமுறை பற்றிய சிறிதும் அக்கறை இல்லாத சுயநல சோம்பேறிகலாக மாறிப்போய்விட்டது நம் சமூகம்.



நம் நீர் நிலைகள் முற்றிலும் நாசமாகிவருகிறது. ஒவ்வொரு நாளும் எத்தனை ப்ளாஸ்டிக் பைகளை நாம் கடைகளில் இருந்து பெறுகிறோம்? வீட்டில் இருக்கும் கூடைகளையோ பைகளையோ பயன்படுத்தினால் எத்தனை ப்ளாஸ்டிக் பைகளை நம்மால் தவிர்க்க முடியும்? தயவுசெய்து ப்ளாஸ்டிக் பைகளை தவிர்த்திடுங்கள். என்னை சந்திக்க வருகிறவர்கள் ப்ளாஸ்டிக் பைகளில் ஏதேனும் வாங்கி வந்தால் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.


சில நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சொல்லி யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. சென்ற ஆண்டு என்னுடைய பிறந்த நாளுக்கு என் தந்தை ப்ளாஸ்டிக் பையில் கேக் வாங்கி வந்தார். நான் அதை பெற்றுக் கொள்ள மறுத்தேன். என் தந்தையை புண்படுத்த வேண்டும் என்பது என் விருப்பமல்ல. ஆனால் நம் அடுத்த தலைமுறை இந்த பூமியில் நிம்மதியாக வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்.

Post a Comment

0 Comments