மேகமலை விடிவு எப்போது?


தேனி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது மேகமலை. கேரள மாநிலத்தின் பெரியார் புலிகள் காப்பகத்துக்கும், தமிழ்  நாட்டில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வன விலங்கு சரணாலயத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது மேகமலை. மேகமலை பகுதியை வனவிலங்கு சரணாலயமாக மாற்றுவதற்கான முயற்சிகள் கிடப்பில் உள்ளது.



சுமார் 600 சதுர கி.மீ பரப்பளவுள்ள இந்த வனப்பகுதி, பல்வேறு அரிய உயிரினங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. மேலும் இரண்டு முக்கிய வனப்பகுதிகளை இணைக்கும் பகுதியாக இருப்பதால் விலங்குகள் நடமாட இங்கு வாய்ப்புகள் அதிகம். இந்த வனப் பகுதியை வன விலங்கு சரணாலயமாக மாற்றுவதன் மூலம், விலங்குகள் வேட்டையாடப் படுவதை பெருமளவு குறைக்க முடியும். மேலும் இந்த வனப் பகுதிகளில் பயிரிடப்படும் கஞ்சாவையும் அடியோடு ஒழிக்க முடியும்.




இந்த வனப் பகுதியானது புலி, யானை, கரடி, சிறுத்தை புலி, வரையாடு, மிளா, கேளையாடு, புள்ளி மான், காட்டெருமை, சோலை மந்தி, மலை அணில், நீர் நாய் மற்றும் இன்னும் பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. மிகவும் அரிய பறவையான இருவாச்சிகள் இங்கு காணப்படுகின்றன. சிறிய அளவிலான தேவாங்குகள் இந்த மலை பகுதியில் வாழ்கின்றன.




 பல்வேறு அரிய வகை தாவரங்கள், மரங்கள் மற்றும் பறவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது மேகமலை. எனவே இந்த வனப் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக மாற்ற வேண்டியது அவசியம், அவசரம். இந்த வனப்பகுதி, மேலும் இரண்டு முக்கிய வனங்களை இணைப்பதால் பெரிய அளவில் விலங்குகளையும் பறவைகளையும் பாதுகாக்க முடியும்.






Post a Comment

0 Comments