மிளா (Sambar Deer)

தெற்கு ஆசியாவின் பல்வேறு நாடுகளிலும் பரவி இருக்கும் மான் மிளா. நம்முடைய வனப் பகுதியில் வாழும் மான்களிலேயே அதிக உயரமும் பருமனும் கொண்ட மான்கள் மிளா மான்கள் தான். சுமார் 300 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கின்றன. புள்ளி மான்களை போன்று பெரிய குழுக்காளாக இவை வாழ்வதில்லை.




ஆண் மான்களுக்கு பெரிய கொம்புகளும், பெண் மான்கள் கொம்புகள் இல்லாமலும் இருக்கும். வனப்பகுதிகளில் தண்ணீர் அதிகம் இருக்கும் பகுதிகளில் இவற்றை பார்க்க முடியும். மிளா பெரும்பாலும் ஒரு குட்டி மட்டுமே ஈனுகிறது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இதனை அழியு வாய்ப்புள்ள இனம் என்று அறிவித்துள்ளது. சமயங்களில் வனங்களை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் வந்து விடுவதுண்டு. தமிழ் நாட்டில் மேற்கு பகுதியை ஒட்டிய வனங்களில் இவை வாழ்கின்றன.


கர்நாடகாவின் பெரும்பாலான தேசிய பூங்காக்களில் இவை காணப்படுகின்றன. புலிகள் தன் உணவின் தேவையை பெரிதாக தேர்ந்தடுப்ப்பதால் இவை புலிகளால் வேட்டையாடப்படுகின்றன.புலிகள் இவற்றை மறைந்திருந்தே தாக்குகின்றன. இவற்றின் கொம்புகள் புலியை பதம் பார்த்துவிடக் கூடும். எனவே மற்ற மான்களை துரத்துவது போல இவற்றை துரத்தி தாக்குவதை விடவும் மறைந்திருந்தே கொல்கின்றன.


நாகர்ஹோலே மற்றும் பிலிகிரி ரங்கம் பெட்டா வனப் பகுதிகளில் இவற்றை அதிகம் பார்த்திருக்கிறேன். நீரோடைகளில் காத்திருந்தால் இவை தென்படக் கூடும். ஓடுவதற்கு முன்பு நம்மை நன்கு உற்று பார்த்துவிட்டுத் தான் ஓடத் தொடங்கும்.




Post a Comment

0 Comments