சமீப காலங்களில் சிறுத்தை புலிகள் ஊருக்குள் புகுந்து விடும் செய்தியையும், பின் அது யாரையேனும் தாக்கினால் பிறகு அவை கூண்டுகள் வைத்து பிடிக்கப்படுவத்தையும் அடிக்கடி பார்க்கிறோம். சிறுத்தை புலிகள் கிராமங்களுக்குள், புகுந்து இடையூறு செய்வதாக வெளியிடப்படும் செய்திகளில், மனிதர்கள் காடுகளில் நுழைந்து செய்யும் இடையூறுகள் எதுவும் சொல்லப்படுவதில்லை. பல சமயங்களில் இவை விஷம் வைத்து கொல்லப்படுகின்றன. சிறுத்தை புலிகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை களைத்து சிறுத்தை புலிகளை அழிவில் இருந்து காக்கவும், மனிதர்கள் இழப்புகளை சந்திக்காமல் இருக்கவும், மத்திய அரசு ஒரு சில வழிமுறைகளை கையாளும் படி அறிக்கை வெளியிட்டுள்ளது.
விழிப்புணர்வை ஏற்ப்படுத்துதல்:
சிறுத்தை புலிகள் தேயிலை தோட்டங்களில் அதிகமாக காணப்படுவதுண்டு.
மனிதர்களை தாக்க வேண்டும் என்ற என்ன இயல்பில் அதற்கு இல்லை, மாறாக மனிதர்களிடம் இருந்து விலகிச் செல்லவே விரும்புகின்றன.
தன்னை தற்காத்துக்கொள்ள, தாக்க முயற்சிக்கலாம்.
எப்போதாவது தென்படும், சிறுத்தை புலிகள், உடனடியாக பிடிக்கப்பட்டு காடுகளில் விடப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அவசியம் ஏதும் இல்லாமல், ஒரு சிறுத்தை புலியை பிடித்து காட்டுக்குள் விடுவதன் மூலம், அந்த பகுதியை மற்றுமொரு சிறுத்தை புலி ஆக்கிரமித்துக் கொள்ளும்.
கிராமப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம், பன்றிகளின் எண்ணிக்கை குறையும். இதனால், சிறுத்தை புலிகள், ஊருக்குள் வருவதும் குறையும்.
கால்நடைகள் வளர்ப்பவர்கள், சிறுத்தை புலிகள் தாக்காத வண்ணம் பட்டிகளை அல்லது வேலிகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.
ஒருங்கிணைந்த செயல்பாடு
"முதன்மை குழு" மற்றும் "அவசரகால குழு" என்ற இரண்டு குழுக்களை உருவாக்குதல். சிறுத்தை புலிகள், மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் நுழைந்தாலோ அல்லது சேதம் ஏற்ப்படுத்திவிட்டாலோ முதலில் "முதன்மை குழு" அங்கு சென்று, கூட்டத்தை கட்டுப்படுத்தி, சிறுத்தை புலியை பாதுகாக்க வேண்டும். யாரையேனும் தாக்கியிருந்தால் உடனடியாக அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கபப்ட வேண்டும்.
அதன் பிறகு "அவசரகால் குழு" உதவியோடு, சிறுத்தை புலி பத்திரமாக மீட்கப்பட வேண்டும். இதற்காக தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் யாவும் வழங்கப்படும். மேலும் ஒரு கால்நடை மருத்துவர் உடனிருப்பார். இவர்கள் அனைவருக்கும் தனியாக அடையாளம் காணும் வகையில் சீருடைகள் அணிந்திருப்பர்.
கூட்டத்தை கட்டுப்படுத்துதல்:
அளவுக்கு அதிகமான கூட்டம் மற்றும் அவர்கள் எழுப்பும் ஒலி, சிறுத்தை புலியை பயம் கொள்ள செய்து, அதை பத்திரமாக மீட்பதில், இடையூறுகளை ஏற்ப்படுத்தும். வன மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். அவசர கால ஊர்தி தயாராக இருக்க வேண்டும்.
பத்திரமாக மீட்டெடுத்தல்:
கிணற்றுக்குள் விழுந்தாலோ, அல்லது, கட்டிடங்களுக்குள் மறைந்திருந்தாலோ பத்திரமாக மீட்டெடுத்து, மீண்டும் வனப்பகுதியில் விட வேண்டும். அந்த சூழ்நிலையில் மனிதர்களின் இடையூறுகள் இல்லாமல் பத்திரமாக மீட்கப்பட வேண்டும். வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் பிடிபட்டால், இரவு நேரங்களில், விடுவிக்க வேண்டும்.
அணுகுமுறை:
பிடிபட்ட சிறுத்தை புலி, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட கூடாது. அவற்றின் உடலில் காயம் ஏற்ப்பட்டிருந்தால் மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். ஒரு மாத காலத்திற்கு கண்காணிப்பில் இருக்கும் சிறுத்தை புலி, மீண்டும் காட்டுக்குள் விட வேண்டியதில்லை. மாறாக அவை தொடர்ந்து பராமரிப்பில் இருக்க வேண்டும்.
விடுவித்தல்/இடம் மாற்றுதல்:
விடுவிக்கபப்டும் சிறுத்தை புலிகள் தொடர்ந்து கண்காணிக்க ரேடியோ காலர் முறையை பின்பற்றலாம். பெரும்பாலும், அவை தான் வாழ்ந்த இடத்தை தேடி கண்டுபிடித்துவிடும் ஆற்றல் உள்ளத்தால், அவற்றை வேறு இடங்களுக்கு மாற்றும் அவசியம் இல்லை.
மனிதர்களை கொன்று பின் பிடிபடும் சிறுத்தை புலிகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விட வேண்டியதில்லை. மாறாக அவை தொடர்ந்து பராமரிப்பில் வளரக்கப்பட வேண்டும். பிடிப்பட்ட சிறுத்தை புலிகளை இரும்பு கூண்டில் அடைக்கப்பட கூடாது. அவை fiber கூண்டில் அடைக்கப்பட வேண்டும்.
இழப்பீடு:
மனிதர்களுக்கு ஆபத்து நேர்ந்தால், இழப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு ஒரு வர காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும்.
தகவல் சேகரிப்பு:
சிறுத்தை புலிகள் மற்றும் மனிதர்களுக்கு இடையேயான முரண்பாடுகள் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

0 Comments