தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்து வரும் 34 வயதான கெவின் ரிச்சர்ட்சன், சிங்கங்களை அழிவில் இருந்து காப்பதற்காக போராடி வருகிறார். ஜோஹன்னஸ்பார்க்கிலிருந்து 50 மைல் தொலைவில் வெள்ளை சிங்கங்களின் ராஜ்ஜியம் என்ற 2000 ஏக்கர் பரப்பளவு கொண்ட பூங்காவை நடத்தி வருகிறார்.
இங்கு இவருடைய பராமரிப்பில் மொத்தம் 39 சிங்கங்களை வளர்த்து வருகிறார். சிங்கங்கள் மட்டுமல்லாது சிறுத்தை புலி மற்றும் கழுதை புலி போன்றவற்றுடனும் நெருக்கமாக பழகும் மனிதராக இருக்கிறார். சிங்கங்களின் பொதுவான குணங்களை விடவும், அவற்றை அதன் உள்ளுணர்வு மூலமாக புரிந்து கொண்டு பழகும் கெவின், சிங்ககளின் லேசான தாக்குதலுக்கும் உள்ளாகி இருக்கிறார்.
பெரும்பாலான சிங்கங்களை குட்டியில் இருந்தே வளர்க்கத் தொடங்கும் கெவின், அவற்றோடு நெருங்கி பழகிவிடுகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் 350000 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை தற்போது 25000 ஆக குறைந்து விட்டது. சிங்கங்களை வேட்டையாடுபவர்களை பெரும்பாலான அரசுகள் கண்டு கொள்வதில்லை.
சிங்கங்களின் பாதுகப்பிற்க்காக ஆவண படங்களையும் கெவின் இயக்கி வருகிறார். சமீபத்தில் White Lion என்ற திரைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இயற்கையின் மொழியை புரிந்து கொள்கிற மனிதர்கள் எப்போதும் அதிசயம் தானே?

0 Comments