சுமத்திரா புலிகள் - இன்னும் கொஞ்சமே மிச்சம் இருக்கு

இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவுகளில் மட்டுமே காணப்படும் அரிய விலங்கு சுமத்திரா புலிகள். உருவத்தில் மற்ற புலி இனங்களைக் காட்டிலும் அளவில் சிறியதாக இருக்கும். இவற்றின் நிறமும் மற்ற புலி இனங்களைக் காட்டிலும் வேறுபட்டு காணப்படும். ஆண் புலிகளுக்கு பிடரி மயிர் உண்டு. வேகமாக நீந்தும் தன்மை கொண்ட இந்த புலிகள், நீர் வாழ் உயிரினங்களை எளிதில் வேட்டையாடி உண்ணும். இது தவிர காட்டுப் பன்றி, மான் போன்றவற்றையும் வேட்டையாடும்.

sumatran_tiger


பொதுவாக அடர்ந்த மழைக் காடுகளில் இவை வசிக்கும். 12000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்தில் ஏற்பட்ட உயர்வு காரணமாக சுமத்ரா தீவுக்குள் மட்டுமே முடங்கிய புலிகள் பரிணாம வளர்ச்சியில் இன்று தனித்தன்மையோடு உருவாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. நானூறுக்கும் குறைவான புலிகளே உள்ளதாகக் கூறப்படும் நிலையில் இவற்றைப் பாதுகாக்க தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. 
 
 
வேளான் நிலங்களுக்காக தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுவதும், புலிகள் தொடந்து வேட்டையாடப்படுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. மிகவும் அருகிவிட்ட (Critically Endangered) இனமாக இந்த புலிகள் International Union for Conservation of Nature ஆல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
 

Post a Comment

0 Comments